[ad_1]
Actor Ajith: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் அஜர்பைஜானில் நிலவும் காலநிலை காரணமாக மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழு திணறி வந்தனர். அதனால் படக்குழு சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று அஜித்தின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருப்பவர் அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா. அவர் தன்னுடைய இணையதள பக்கத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பகிர்ந்து விடாமுயற்சிக்கான புதிய அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: அவர போய் பாத்தான்.. இன்னிக்கு என் மகன் நல்லா இருக்கான்! பிரபல மூத்த நடிகரை நெகிழ வைத்த அஜித்
அதாவது அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது என்றும் இனி அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறொரு புதிய இடத்தில் நடத்தப்படும் என்றும் அந்த பதிவில் கூறியிருக்கிறார். இது மற்ற ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
அதாவது சாமி வேறொரு ரூபத்தில்தான் வருவார் என்று சொல்வார்கள். அப்படி அஜித்தை சுரேஷ் சந்திராவின் ரூபத்தில்தான் ரசிகர்கள் இதுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விடாமுயற்சி படம் வெளிவரவே இல்லையென்றாலும் அஜித்தை பற்றி அவ்வப்போது எதாவது ஒரு அப்டேட்டை கொடுங்கள் என சுரேஷ் சந்திராவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: 69வது பிலிம்பேர் !.. விருதுகளை அள்ளி குவித்த 12th Fail.. அப்படி என்ன கதை இது தெரியுமா?…
அந்த வகையில் இன்று சுரேஷ் சந்திராவே அவருடைய பக்கத்தில் இந்த பதிவை போட்டது ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்த மாதிரி அமைந்தாகிவிட்டது. இதையும் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்
[ad_2]