Home Cinema News இன்னைக்கு 3 மணி நேரத்தில் சோலி முடிஞ்சிடும்!.. விமர்சனத்தை எல்லாம் தடுக்கவே முடியாது.. அமீர் அதிரடி! – CineReporters

இன்னைக்கு 3 மணி நேரத்தில் சோலி முடிஞ்சிடும்!.. விமர்சனத்தை எல்லாம் தடுக்கவே முடியாது.. அமீர் அதிரடி! – CineReporters

0
இன்னைக்கு 3 மணி நேரத்தில் சோலி முடிஞ்சிடும்!.. விமர்சனத்தை எல்லாம் தடுக்கவே முடியாது.. அமீர் அதிரடி! – CineReporters

[ad_1]

பத்திரிகையாளர் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர் வெளிப்படையாக விமர்சனங்கள் குறித்தும் மற்றும் பல விஷயங்கள் குறித்தும் பேசியது வைரலாகி வருகிறது.

சில தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் மூன்று நாள் கழித்து தான் விமர்சனம் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், ஒரு தயாரிப்பாளராக நானே சொல்றேன். அந்த காலம் எல்லாம் முடிந்து விட்டது.

இதையும் படிங்க: ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!.. ஷிவானி சும்மா ஜிவ்வுன்னு இழுக்குறாரே!..

இன்றைய காலத்தில் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தனி நபரும் விமர்சகராக மாறி நிற்கின்றனர். ஒரு படம் வெளியாகி 3 மணி நேரத்தில் அந்த படத்தின் சோலியை முடித்து விடுகின்றனர். படத்தை நல்லா எடுத்திருந்தாலே விமர்சகர்களின் வாயில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என பயந்துக் கொண்டிருக்கின்றனர்.

மூன்று மணி நேரம் கூட இல்லை. முதல் 30 நிமிடத்தில் இருந்தே படத்தின் ரிவ்யூவை தியேட்டரில் இருந்தே டைப் செய்து கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  இதில், யாரையும் குறை சொல்ல முடியாது. சினிமா கலைஞர்கள் தான் படங்களை சிறப்பாக இயக்க போராட வேண்டும்.

இதையும் படிங்க: அந்த ஹீரோ நடிக்க வேண்டிய கதையில் நடித்த அஜித்!.. அட இதெல்லாம் நமக்கு தெரியாம போச்சே!..

ஆனால், பத்திரிகையாளர்கள் சில இடங்களில் கேட்கும் கேள்விகள் சம்பந்தம் இல்லாமலும், தனி மனித தாக்குதல் செய்வதையும் தான் தவிர்க்க வேண்டும் என்கின்றேன் என அந்த இடத்திலேயே கெத்தாக பத்திரிகையாளர்கள் செய்யும் தவறுகளையும் அமீர் சுட்டிக் காட்டி பேசியிருந்தார்.

இன்று வரும் போது கூட இரண்டு படங்களின் விமர்சனங்களை கேட்டுக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் புட்டு புட்டு வைத்து விடுகின்றனர் என அமீர் பேசியிருந்த நிலையில், ஜப்பான் படம் ஃபிளாப் ஆனதில் அமீருக்குத்தான் ரொம்பவே சந்தோஷம் போல தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here