[ad_1]
Actor ajith: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அஜித் குமார். பல படங்களில் சாக்லேட் பாயாகவும், கதாநாயகியின் பின்னால் சுற்றி அவரை காதலிக்கும் தமிழ் சினிமாவின் அக்மார்க் வேடத்தில் நடித்தார். சரணனின் அமர்க்களம் திரைப்படத்தில் ஒரு ரவுடியாக நடித்து ஆக்ஷன் ரூட்டுக்குக் மாறினார்.
அதன்பின் தீனா, அமர்க்களம் உள்ளிட்ட பல படங்களில் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனாலும், அவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்போதுதான் ரஜினி நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தை ரீமேக் செய்து நடித்தார். ஸ்டைலீசான லுக்கில் அஜித்தை பார்த்த பலரும் அவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.
இதையும் படிங்க: துணிவு படத்தில் அந்த காட்சியில் நடித்தது அஜித்தே இல்லையாம்!.. என்னப்பா சொல்றீங்க!..
சில வருடங்கள் கழித்து அவர் நடித்த மங்காத்தா திரைப்படம் அஜித்தின் கேரியரையே மாற்றிய முக்கிய படமாகும். ஏனெனில், இந்த படத்திலிருந்து அவர் முழுக்க முழுக்க ஒரு மாஸ் ஹீரோவாக மாறினார். அதேபோல், அவருக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக மாறியது இந்த படத்திலிருந்துதான்.
அதன்பின் அந்த ரூட்டை பிடித்த அஜித் இப்போது வரை மாஸ் ஹீரோவாக கலக்கி விஜய்க்கு டஃப் கொடுத்து வருகிறார். விஜயின் வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தை துணிந்து வெளியிட்டார். அந்த படமும் நல்ல வசூலை பெற்றது. இப்போது விடாமுயற்சிக்கு தயாராகி வருகிறார்.
இதையும் படிங்க: பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..
அஜித் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து மாறமாட்டார் என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் மங்காத்தா படம் உருவான போது நடந்த விஷயத்தைத்தான் இங்கே பார்க்க போகிறோம். வெங்கட்பிரபுதான் இயக்குனர் என அஜித் முடிவு செய்ததும் 50க்கும் மேற்பட்டோர் அவரை தொடர்பு கொண்டு ‘வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஏன் நடிக்கிறீர்கள்?. அவர் சீரியஸாக படப்பிடிப்பு நடத்த மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கிரிக்கெட் விளையாடுவார்கள். 6 மணிக்கு மேல் பார்ட்டி பண்ண போய் விடுவார்கள். காலையில் போதையிலேயே படப்பிடிப்புக்கு வருவார்கள்’ என கூறியுள்ளனர்.
ஆனால், அஜித் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த படத்தை வெற்றிப்படமாக கொடுத்தே ஆகவேண்டும் என அப்படத்தில் நடித்தார். படமோ சூப்பர் ஹிட் ஆகி அஜித்திடம் பேசியவர்கள் முகத்தில் கறியை பூசியது. அஜித் ஒரு முடிவை எடுத்தால் யாருக்காகவும், எதற்காகவும் அதிலிருந்து மாற மாட்டார் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம்.
இதையும் படிங்க: அவர பாக்குறதே கஷ்டம்! பாத்துட்டா? டான்ஸ் கத்துக்க வந்த அஜித்தை பற்றி கலா மாஸ்டர் கூறிய சூப்பரான தகவல்
[ad_2]