[ad_1]
Vijayakanth: தமிழ் சினிமாவில் விஜயகாந்த் பெரிய தோல்வியை சந்தித்த அளவு, பெரிய வெற்றியையும் சந்தித்து இருக்கிறார். இரண்டு பக்கத்திலும் தன்னுடைய சம்ராஜ்ஜியத்தினை வைத்து இருந்தார். அதுக்கு முக்கிய காரணம் அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தான். அப்படி ஒரு சம்பவமும் நடந்து இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த் ரெஸ்ட் எடுக்காமல் நடித்து கொண்டே இருந்தார். சில வருடம் அவருக்கு லாபமாக இருக்கும். அதே போல சில வருடம் எல்லா படங்களுமே காலை வாரும். அப்படி ஒரு வருடமாக இருந்தது தான் 1989. இந்த வருடத்தின் ஆரம்பத்திலே விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 11 படங்களும் தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: 4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?…
ஆனால் அந்த நேரத்தில் அவர் குடும்பத்தினர் விஜயகாந்துக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து கொண்டு இருந்தனர். நண்பனின் திருமணம் தொடர் தோல்வி சமயத்தில் நடந்து விடக்கூடாது என்பதில் இப்ராஹிம் ராவுத்தர் தீர்க்கமாக இருந்தார் அதற்காக விஜயகாந்துக்கு ஒரு மெகா ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்தார்.
அப்படி அவர் முடிவு செய்து விஜயகாந்த் நடித்த படம் தான் புலன்விசாரணை இப்படத்தை இயக்கியது ஆர் கே செல்வமணி அப்படத்தில் தான் அவர் அறிமுகமானார் படத்தின் எல்லா வேலைகளையும் முடிந்து இப்ராஹிம் ராவுத்தருக்கு அதை போட்டுக் காட்டியது படக்குழு. பொறுமையாக பார்த்து முடித்த இப்ராஹிம் ராவுத்தர் பட குழுவிடம் சில மாற்றங்களை செய்ய சொல்லினார்.
அதன்பின்னர் விஜயகாந்த் சரத்குமார் இடையேயான வித்தியாசமான சண்டைக்காட்சி முதற்கொண்டு படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை ஆர் கே செல்வமணி செய்தார். இதைத்தொடர்ந்து படம் 1990ம் ஆண்டு தை பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. அந்த மாத 30ந் தேதி விஜயகாந்த்-பிரேமலதா திருமணம் நடந்தது. ராவுத்தர் ஆசைப்பட்டது போல 1988 ஆம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் வெற்றிக்கு பின்னர் 1990ல் புலன் விசாரணை தான் மிகப்பெரிய வசூலை குவித்தது. பெரிய வெற்றியுடன் திருமணமும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலை பாடி பவதாரிணிக்கு விடை கொடுத்த குடும்பத்தினர்…
[ad_2]