Home Cinema News அரவிந்த்சாமியை திருமணம் செய்ய மறுத்த அந்த நடிகை – வைரலாகும் புகைப்படம் – CineReporters

அரவிந்த்சாமியை திருமணம் செய்ய மறுத்த அந்த நடிகை – வைரலாகும் புகைப்படம் – CineReporters

0
அரவிந்த்சாமியை திருமணம் செய்ய மறுத்த அந்த நடிகை – வைரலாகும் புகைப்படம் – CineReporters

[ad_1]

கோலிவுட்டில் சார்மிங் ஆக்டராக பெண்கள் மனதை கொள்ளை கொண்டவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. ஆரம்பத்தில் மாடலிங் செய்து அதன் மூலம் தன் செலவுகளை பார்த்துக் கொண்டு வந்த அரவிந்த்சாமியை ஒரு விளம்பர படத்தின் மூலம் தூக்கினார் மணிரத்தினம்.

அந்தப் படம் தான் தளபதி. தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக ஒரு கலெக்டராக அவருடைய வேலையை சிறப்பாக செய்து மக்கள் அபிமானங்களை வெகுவாக பெற்றிருப்பார். அதனை தொடர்ந்து ரோஜா, பம்பாய் போன்ற ஹிட் படங்களில் நடித்து ஒட்டுமொத்த இளம் பெண்களின் கள்வனாக மாறினார்.

இதையும் படிங்க : ஒரு தடவ சொன்ன பத்தாதா? மேடை போட்டு வேற சொல்லனுமா? எதிர்பார்ப்பை சுக்கு நூறாக உடைத்த விஜய்

அதிலிருந்தே எனக்கு அரவிந்த்சாமி மாதிரிதான் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லாத பெண்களே இல்லை என்று சொல்லலாம். ஏன் அந்த டையலாக்கை படத்தில் கூட வைத்தார்கள். எல்லாவற்றையும் தாண்டி ஒரு ஆணழகனாக சினிமாவில் வலம் வந்தார் அரவிந்த்சாமி.

aravind

aravind

சினிமா நடிகைகளுக்கே பிடித்தமான நடிகராக வலம் வந்தார். பீக்கில் இருக்கும் போதே சொந்த பிரச்சினைகளால் காணாமல் போனார் அரவிந்த்சாமி. ஆனால் ஒரு நீண்ட இடைவேளிக்கு பிறகு கடல் என்ற படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்தார். இருந்தாலும் அந்தப் படம் அந்தளவுக்கு எடுபடவில்லை.

அதன் பிறகு போகன், தனிஒருவன் போன்ற படங்கள் அவரை மீண்டும் எழுச்சி பெற செய்தது. இந்த நிலையில் அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது. அந்த புகைப்படத்தில் அரவிந்த்சாமியுடன் இருப்பது நடிகை வைஷ்ணவி.

அவர் ரோஜா படத்தில் முதலில் அரவிந்த்சாமி பெண் கேட்டு வருவாரே. அவர்தான். ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் உங்களை திருமணம் செய்ய முடியாது என்றும் சொல்வாரே. அந்த வைஷ்ணவிதான். அவர் சமீபத்தில் அரவிந்த்சாமியை தன்னுடைய குடும்பத்தாருடன் சென்று சந்தித்திருக்கிறார். அந்தப் புகைப்படம் தான் இன்று வைரலாகி வருகின்றது.

aravind1

aravind1

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here