[ad_1]
Vidamuyarchi: சினிமாவில் இருந்தாலும் சினிமா உலகிலிருந்து தள்ளியே இருப்பவர்தான் அஜித். எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளமாட்டார். ஆனாலும், அவரின் படங்கள் நல்ல வசூலை பெறுவதால் தயாரிப்பாளர்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். துணிவு படம் வெளியாகி சரியாக ஒரு வருடங்கள் ஆன நிலையிலும் அஜித்தின் அடுத்த படம் இன்னமும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் அஜித் மட்டுமே. சில மாதங்கள் பைக்கை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்றப்போய்விட்டார்.
இதையும் படிங்க: அவர போய் பாத்தான்.. இன்னிக்கு என் மகன் நல்லா இருக்கான்! பிரபல மூத்த நடிகரை நெகிழ வைத்த அஜித்
அதன்பின் விக்னேஷ் சிவன் பெயர் அடிபட்டு, அதன்பின் அவர் வெளியேறி மகிழ் திருமேனி உள்ளே வந்தார். ஆனால், இதுதான் கதை என முடிவு செய்வதற்கே 6 மாதம் ஆகிவிட்டது. ஒருவழியாக ஒரு கதையை முடிவு செய்து துபாய், சார்ஜா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர்.
அதன்பின் அசர் பைசான் நாட்டில் அழகான இடங்கள் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றனர். அங்கு படப்பிடிப்பை துவங்கி நடந்து வருகிறது. ஆனால், பனி மழைப்பொழிவு காரணமாக இப்போது படப்பிடிப்பு நிறுத்தப்படுள்ளது. இதுவரை விடாமுயற்சி படம் தொடர்பான எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: என்னய்யா நடக்குது! இணையத்தை தெறிக்கவிடும் அஜித்.. விடாமுயற்சி அப்டேட்டை வாரி வழங்கிய மேனேஜர்
ஆனால், அசர் பைசானில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் ஆரவ் தொடர்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டார். எனவே, அப்டேட் இல்லையே என வருத்தப்பட்டு கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு இது சந்தோஷத்தை கொடுத்து வருகிறது.
ஏனெனில் ஒவ்வொரு புகைப்படத்திலும் அஜித் செம ஸ்டைலாக இருக்கிறார். இந்நிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் இப்போது வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
[ad_2]