[ad_1]
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினி குழந்தையை மறைத்து வைத்து விளையாட்டு காட்டுகிறார். அங்கிருந்தவர்கள் எல்லாம் பதறி அடித்து தேடி பார்க்க குழந்தை கிடைக்கவில்லை. உடனே பாக்கியா, ஜெனி, செழியன் என அனைவரும் மாலினியையே கேட்கின்றனர்.
ஜெனி அழத்தொடங்க மாலினி போய் குழந்தையை எடுத்துக்கிட்டு வருகிறார். இதனால் ஈஸ்வரி கடும்கோபமாகிறார். உனக்கு குழந்தையை தூக்க தெரியுமா எனத் திட்டுகிறார். பாக்கியாவும் கோபமாகி அவன் லீவ்ல தான இருக்கான். எதுக்கு நீ இங்க அடிக்கடி வர வீட்டை விட்டு வெளியே போ எனக் கடுமையாக திட்டுவிட்டு அனுப்புகிறார்.
இதையும் வாசிங்க:ராக் ஸ்டாரை மாத்தி ராபரி ஸ்டார்னு வச்சிக்கோ!. அனிருத்தை விளாசிய புளூசட்ட மாறன்…
இதை தொடர்ந்து கோயிலுக்கு வருகிறார் பழனிச்சாமி. அவர்கள் கேட்டரிங்கிற்கு ஆட்களை தேடிக்கொண்டு இருப்பதாக கூறுகின்றனர். அந்த நேரத்தில் பழனிச்சாமி, பாக்கியாவுக்கு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு கிளம்புகிறார். இதனையடுத்து, வீட்டில் இருக்கும் கோபி பாக்கியா பேசியதால் செழியன் வேலைக்கு எதுவும் பிரச்னை வரப்போகுது.
அந்த பொண்ணே மனசு வந்து வீட்டுக்கு வந்து வேலை செஞ்சிட்டு போகுது என மாலினிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். அங்கு வரும் பாக்கியா, அப்படி யாரும் இங்க வர வேண்டாம். வீட்டுக்கு வந்தா அந்த மரியாதையோட நடந்துக்கணும் என்கிறார். ஜெனியும் பாக்கியா பேசியதை சரி என்கிறார். எனக்கே அந்த பொண்ணு மேல கோபம் தான் வந்துச்சி எனக் கூறுகிறார்.
உடனே கோபி மனுஷங்க மேல நம்பிக்கை வேண்டும் என விடாமல் மல்லுக்கட்ட நம்பி ஏமாந்தது போதும். இங்க யாரும் அவ்வளவோ யோக்கியம் கிடையாது என மூக்கை உடைக்கிறார். இதை கேட்ட கோபி, செழியன் என இருவருமே அதிர்ச்சி ஆகின்றனர்.
இதையும் வாசிங்க:சிறகடிக்க ஆசை: இரண்டே நாளில் சண்டைக்கு நிற்கும் ஸ்ருதி-ரவி… முத்துவை அலறவிட்டு சென்ற மீனா..!
நான் என்ன பண்ணேன் என கோபி சொன்ன அவ உன்னை தான்டா சொல்றா என ராமமூர்த்தி சிரிக்கிறார். இதைதொடர்ந்து, மாலினி அழுதுக்கொண்டு இருக்க செழியன் அங்கு வருகிறார். உங்க அம்மா என்னை வீட்டுக்கு வரக்கூடாதுனு திட்டுனாங்க. செழியன் நீ ஏன் வரணும் எனத் திட்டுகிறார்.
நான் அங்கெல்லாம் வரவே இல்லை. உனக்கு குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி என் கூட நீ பாசமா இருந்த மாதிரி இருந்தா போதும் என மிரட்டுகிறார். செழியன் அதெல்லாம் முடியாது எனத் திட்டுகிறார். உடனே மாலினி தன் போனில் செழியனை கட்டிப்பிடித்தப்படி நிறைய படங்களை காட்டுகிறார். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் செழியன். மாலினி அவரை கட்டிப்பிடித்துக்கொள்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
[ad_2]