[ad_1]
இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா ஜவான் படத்திலேயே விஜய் அண்ணாவுக்கு ஒரு கேமியோ ரோல் வச்சிருப்பாரே அட்லீ. விஜய்யையும் ஷாருக்கானையும் வச்சு பெரிய படத்துக்கு கதை எழுதிட்டு வரேன்னுலாம் கனவு கண்டாரே ஆனால், அதற்குள் சினிமா கரியருக்கே எண்ட் கார்டு போட்டு அரசியல் தான் இனிமேல் என்றும் மக்கள் தொண்டு தான் என் வாழ்க்கை என்றும் விஜய் முடிவெடுத்து விட்டார்.
அட்லீயின் ஆசையில் இப்படி மண்ணை அள்ளிப் போட்டு விட்டாரே விஜய் என தற்போது அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு 1100 கோடி வசூலை வாரிக் குவித்திருந்தது.
இதையும் படிங்க: புதுசா புதுசா காட்டுறியே பூஜா ஹெக்டே!.. ஜூம் பண்ணி பண்ணி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!..
மீண்டும் விஜய்யை வைத்து அட்லீ ஒரு படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டு வந்தனர். அவரும் விஜய் மற்றும் ஷாருக்கானுக்காக ஒரு கதையை எழுதி வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், அந்த படம் இனி உருவாக வாய்ப்பே இல்லை என தெரிகிறது.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் நடித்த லியோ திரைப்படம் எல்சியூவில் இணைந்திருந்தது. ஆனால், கோட் பட்த்தை முடித்து விட்டு இன்னும் ஒரு படத்தில் மட்டும் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எல்சியூவிலும் விஜய் நடிக்க மாட்டாரா? ரோலக்ஸுக்கும் லியோவுக்கும் சண்டை நடக்காதா? என ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.
இதையும் படிங்க: தொழில் மேல சத்தியம்!.. நான் சொல்லவே இல்ல!.. மன்னிப்பு கேட்கும் லால் சலாம் பட நடிகை!..
2 ஆண்டுகள் கழித்து அரசியலில் எதுவும் செட்டாகவில்லை என்றால் மறுபடியும் விஜய் நடிக்க வந்து விடுவார் என்றும் கூறுகின்றனர். ஆனால், அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை விஜய் தேர்தலில் போட்டியிட்டால் அவர் தான் சிஎம் என ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.
[ad_2]