[ad_1]
ஒவ்வொரு நடிகருக்கும் இரண்டு இமேஜ் இருக்கும். அவருடன் நெருங்கிய பழகியவர்களுக்கும், அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் இருக்கும் ரியல் இமேஜ். அடுத்து அந்த நடிகரை பற்றி அவருக்கு பிடிக்காதவர்கள் பரப்பி ரசிகர்களிடம் ஏற்பட்ட தவறான இமேஜ். பொதுவாக தவறான இமேஜ் என்பது மக்களிடம் வேகமாக பரவி விடும்.
எல்லோரிடம் நம்மை பற்றி சொல்லிக் கொண்டிருக்க முடியாது என நினைக்கும் நடிகர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனெனில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என பிஸியாக இருப்பார்கள். இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு பாட்டா!.. படு கேவலம்!. துரோகம்!. விஜயை காலம் மன்னிக்குமா?!.. பொங்கும் பிரபலம்!..
சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் முன்னேறியவர் நடிகர் அஜித். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். துவக்கத்தில் பல படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்து பின்னர் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறி இப்போது மாஸ் ஹீரோவாக மாறியவர் இவர்.
அஜித் எப்படிப்பட்டவர் என்பது அவருடன் பழகியவர்களுக்கும், அவரின் படங்களில் வேலை செய்தவர்களுக்கும் நன்றாக தெரியும். அவர் ஒரு ஜென்டில்மேன், மிகவும் எளிமையாக பேசுவார். ஜெண்டிலாக நடந்து கொள்வார். பெண்களை மிகவும் நாகரீகமாக நடத்துவார். மிகவும் டீசண்ட்டாக நடந்து கொள்வார் என சொல்வார்கள்.
இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவரும் அஜித்துடன் பில்லா படத்தில் நடித்தவருமான ரகுமான் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘பில்லா படத்தில் அஜித்துடன் நடிக்க அழைப்பு வந்தபோது யோசித்தேன். ஏனெனில், அஜித்தை பற்றி நான் வேறு மாதிரி கேள்வி பட்டிருந்தேன். அவர் மிகவும் அரகண்டாக நடந்துகொள்வார். சக நடிகர்களை மதிக்க மாட்டார்’ என என்னென்னவோ சொன்னார்கள்.
இதையும் படிங்க: ஹாலிவுட் பட கதையில் மகனுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்!.. அட நடக்காம போச்சே!…
இதனால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், அவர் அப்படியெல்லாம் இல்லை என சொல்லி சமாதானப்படுத்தி இயக்குனர் என்னை நடிக்க வைத்தார். ஆனால், அஜித்தை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்பது அப்புறம்தான் எனக்கு தெரிய வந்தது.
என்னை மிகவும் அன்புடன் வரவேற்பு உபசரித்து பேசினார் அஜித். அன்பாக பழகினார். மிகவும் ஜெண்ட்டிலாக நடந்து கொண்டார். அவருடன் நடிப்பதே மிகவும் பிடித்திருந்தது. அதன்பின் அவர் மீதான எணணத்தை மாற்றிக்கொண்டேன்’ என ரகுமான் சொல்லி இருக்கிறார்.
[ad_2]