[ad_1]
தெலுங்கில் வெளியான சீதா ராமம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருனள் தாக்கூர். இவர் மும்பையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் செய்து, சினிமாவில் நடிப்பது என ஆர்வம் காட்டியவர். முதலில் இவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.
அதேபோல், முதலில் சில மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் டோலிவுட் பக்கம் போய் சில தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். அதில், குறிப்பாக துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த சீதா ராமம் திரைப்படம் அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது.
இப்போது ஹிந்தி, தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். அம்மணியின் கவர்ச்சி புகைப்டங்கள் எல்லாம் இணையத்தில் மிகவும் பிரபலம். இந்நிலையில், இப்போது மிர்னாவுக்கு தமிழ் சினாவில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் மிருனள் தாக்கூர் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டேவும் நடிக்கவுள்ளார்.
அதேபோல், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருக்கிற சரித்திர கதையிலும் மிருனள் தாக்கூர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருக்கிறார். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க மிருனள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மொத்தத்தில் சிவகார்த்திகேயன், சிம்பு, அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கவுள்ள மிருனள் தாக்கூர் இங்குள்ள நடிகைகளின் மார்க்கெட்டை காலி செய்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பெரிய நடிகர்களின் படிங்களின் வாய்ப்புகளை மிருனள் தாக்கூர் தட்டி தூக்குவது இங்குள்ள நடிகைகளுக்கு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
[ad_2]