[ad_1]
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். விஜய் சேதுபதி எங்கு சென்றாலும் ஸ்பெஷல் என்று மக்களால் போற்றப்படுபவர்.
சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. ஆனால் மாஸ் வில்லனாக நடித்த படங்கள் பெரிய ஹிட். அதனால் விஜய் சேதுபதியை வில்லனாக அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், விஜய் சேதுபதி ஹீரோ வாய்ப்புகளை தவற விடுவதில்லை. குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. அப்போது விஜய் சேதுபதி வந்ததை அறிந்த மலேசியாவில் வாழும் தமிழர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
அப்போது ஒரு பெண் ரசிகை தனியாக வந்து தான் படும் கொடுமைகளை விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். அதாவது மலேசியாவில் வீட்டு வேலை செய்ய அந்த பெண் அழைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த வேலை பிடிக்காமல் அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் வெளியில் வந்து கிடைக்கும் வேலையை பார்த்தார்.
அதனால் விசா காலாவதியான பிறகு அந்தப் பெண்ணால் தமிழகம் செல்ல முடியவில்லை. இதையெல்லாம் விஜய் சேதுபதியிடம் கூறிய விஜய் சேதுபதி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த பெண்ணை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: கமல் படத்தில் நடிக்க எனக்கு எதிராக கோடம்பாக்கம் திரண்டது! ஏனென்று உனக்கு தெரியுமா? தியாகோ ஓபன் டாக்
[ad_2]