[ad_1]
Kanguva: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் முக்கிய தகவல்கள் ஒன்று கசிந்து இருக்கும் நிலையில் அதுகுறித்த ஒரு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் தான் ரிலீஸானது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு ரோல் செய்து இருந்தார். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வேறு படங்கள் எதுவும் ரிலீஸுக்கு தயாராக இல்லை. கிட்டத்தட்ட 2 வருடம் கடந்துவிட்டது. தற்போது தான் அவர் நடித்து சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது.
இதையும் படிங்க: இதனால்தான் உங்கள் படத்தில் வேலை செய்யவில்லை!.. பி.சி.ஸ்ரீராம் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன ஷங்கர்..
இப்படம் வரலாற்று கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விஎஃப்எக்ஸ் வேலைகள் இப்படத்துக்கு நிறைய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மும்பையில் செட்டிலாகி இருக்கும் சூர்யா அடுத்து சில பாலிவுட் படங்களிலே நடிக்க இருக்கிறார். தமிழில் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்கள் தள்ளி போகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கங்குவா படத்தின் ஷூட்டிங்கை முடித்து இருக்கிறார் சூர்யா. இப்படத்தில் நாயகியாக திஷா பத்தானி நடிக்கிறார். பெண் வீராங்கனையாக நடிக்கும் திஷாவிற்கு ஐந்து சண்டை காட்சிகள் இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் வில்லனாக அனிமல் படத்தில் மாஸ் காட்டிய பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு வாழ்க்கையை கொடுத்த அந்த படம் விஜய் நடிக்க வேண்டியதாம்!. எப்படி மிஸ் ஆச்சி தெரியுமா?…
[ad_2]