[ad_1]
Director Manirathnam: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் மணிரத்தினம். எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா இவர்களின் சினிமா போக்கு ஓங்கியிருந்த காலத்தில் முற்றிலும் வித்தியாசமான காதல் கதைகளோடு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தவர் மணிரத்தினம்.
காதலை தான் எடுக்கும் படங்களில் மிக ஆழமாக காட்டக் கூடியவர் மணிரத்தினம். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பாடல்களை தவிர்த்து வரும் இயக்குனர்களின் மத்தியில் பாடல்கள் ஒரு படத்திற்கு உயிர் நாடியாக இருக்க வேண்டும் என கூறியவர் மணிரத்தினம்.
இதையும் படிங்க: அந்த சீனில் நடிக்க மறுத்த எம்ஜிஆர்…. சமாதான படுத்தி நடிக்க வைத்த எம்ஜிஆர்… எந்த படம்னு தெரியுமா?….
உலக அழகி ஐஸ்வர்யா ராயை தமிழில் மணிரத்தினம் அறிமுகம் செய்த படம் ‘இருவர்’. அந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் அதில் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது பிரகாஷ் ராஜ் நடித்த தமிழ்செல்வன் கதாபாத்திரம்தான்.
ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லையாம் மணிரத்தினம். படத்திற்கான டெஸ்ட் சூட் எல்லாம் எடுத்த நிலையிலும் எதிலும் கன்வின்ஸ் ஆகாத மணிரத்தினம்,
இதையும் படிங்க: முதல் நாள் கள்ளழகர் பட ஷூட்டிங்! மறுநாள் விஜய் பட சூட்டிங்.. என்ன நடந்துச்சுனா? கேப்டன் குறித்து வையாபுரி சொன்ன தகவல்
நேராக பிரகாஷ்ராஜிடம் வந்து இந்த கேரக்டரில் தான் நீங்கள் நடிக்கிறீர்கள். நாளைக்கு சூட் இருக்கிறது என்ற பெரிய சர்ப்ரைஸை கொடுத்துவிட்டு சென்றாராம் மணிரத்தினம். அந்த கேரக்டர் இன்றளவும் பேசப்பட்டு வருகிற கதாபாத்திரமாகும்.
தமிழ்செல்வன் என்ற கதாபாத்திரம் அந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம். ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் இருவர் பதவி ஆசை காரணமாக விரோதிகளாக மாறுகின்றனர் என்பதுதான் கதையின் சுருக்கம்.
இதையும் படிங்க: மீண்டும் ரசிகர்களுக்கு பல்ப் கொடுத்த பிக்பாஸ் டீம்… மாயா சேவ்… எதிர்பாராத எலிமினேஷன்..!
கடைசியில் தன் நண்பனின் பூதுவுடலை பார்க்கக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்படும் கதாபாத்திரம்தான் தமிழ் செல்வர். இந்தப் படத்தில் தமிழ்செல்வன் ஒரு சிறந்த கவிஞராக இருக்கும் கேரக்டரிலும் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]