Home Cinema News நான் அவருக்கு வில்லனா நடிச்சதால அத செய்ய மாட்டேனு சொன்னாரு! கேப்டன் குறித்து பி.வாசு உருக்கம் – CineReporters

நான் அவருக்கு வில்லனா நடிச்சதால அத செய்ய மாட்டேனு சொன்னாரு! கேப்டன் குறித்து பி.வாசு உருக்கம் – CineReporters

0
நான் அவருக்கு வில்லனா நடிச்சதால அத செய்ய மாட்டேனு சொன்னாரு! கேப்டன் குறித்து பி.வாசு உருக்கம் – CineReporters

[ad_1]

P.Vaasu: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக அறியப்பட்டவர் பி.வாசு. எண்ணற்ற நல்ல நல்ல படங்களை  கொடுத்து ஒரு புகழ்பெற்ற இயக்குனராக இருந்தவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி என மற்ற மொழிகளிலுல் படங்களை இயக்கியிருக்கிறார்.

விஜயகாந்தை வைத்து சேதுபதி ஐ.பி.எஸ் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் பி.வாசு. இன்று விஜயகாந்த் நம்முடன் இல்லை. அவருடன் இருந்த சில நியாபகங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்தார் பி.வாசு.

இதையும் படிங்க: விஜி என்ன விட்டு போயிட்டியாடா..?நடக்க முடியாமல் அழுது கொண்டே வந்த நடிகர் தியாகு…

பி.வாசுவை நடிகராக்கி அழகுபார்த்தவர் விஜயகாந்த் தானாம். வல்லரசு படத்தில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்திருப்பார் பி.வாசு. அந்த நேரம் விஜயகாந்த் புகழ்பெற்ற வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார் . இருந்தாலும் வல்லரசு படத்தில் விஜயகாந்துக்கு இணையான ஒரு இடத்தை அந்தப் படத்தில் வாசுவுக்கு கொடுத்தாராம் விஜயகாந்த்.

அந்தப் படத்தில் ஒரு சீனில் விஜயகாந்த் வாசுவை அடிக்கிற மாதிரி காட்சியாம். ஆனால் கேப்டன் நான் அடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இது படத்திற்காகத்தானே? அடிங்கள் என்று சொல்லியிருக்கின்றனர். வாசுவும் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: அறியாமை அவன ரொம்ப நல்லவனாக்கிடுச்சு! கேப்டன் மறைவால் கதறி அழும் ராதாரவி – எனக்கும் இப்ப இந்த நிலைமைதான்

ஆனால் ஒரு புகழ்பெற்ற இயக்குனர். அவரை நான் அடிப்பதா? என்று சொல்லி வேறொரு நபரை வைத்து அவர் முகத்தை வேட்டியால் மறைத்து வாசுவை அடிக்கிற மாதிரி அந்த காட்சியில் அடித்தாராம் விஜயகாந்த். அந்தளவுக்கு இயக்குனர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் விஜயகாந்த்.

விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆரம்ப விதை போட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 10 படங்களுக்கு மேல் விஜயகாந்தை வைத்து இயக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதனால் எஸ்.ஏ.சந்திரசேகரை குருவாகவே நினைத்தவர் விஜயகாந்த்.

இதையும் படிங்க: அறியாமை அவன ரொம்ப நல்லவனாக்கிடுச்சு! கேப்டன் மறைவால் கதறி அழும் ராதாரவி – எனக்கும் இப்ப இந்த நிலைமைதான்

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here