[ad_1]
sivaji ganesan: ரஜினி எப்படி சினிமாவில் நுழைந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். 1975ம் வருடம் அவர் சினிமாவில் நுழையும் போதெல்லாம் சிவாஜி சற்று வயதாகி அப்பா வேடங்களில் நடிக்க துவங்கிவிட்டார். சிவாஜி பெங்களூரில் பேருந்தில் நடத்துனர் வேலை செய்யும்போதே இங்கே எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்தனர்.
அவர்களை பார்த்து சினிமாவில் வளர்ந்தவர்தான் ரஜினி. அதனால் அவர்கள் இருவர் மீதும் எப்போதும் அன்பும், மாரியாதையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆருடன் அதிகம் நெருங்கி பழகும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. அதேநேரம், சிவாஜியிடம் அது கிடைத்தது. ரஜினியின் வளர்ச்சியை சிவாஜியும் ரசித்தார்.
இதையும் படிங்க: சாதாரணமாக கேட்ட சிவாஜி!.. அவமானமாக எடுத்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..
சிவாஜியை அப்பா போலவே பாவித்தவர் ரஜினி. ரஜினியை சந்திக்கும்போதெல்லாம் நல்ல அறிவுரைகளை அவருக்கு சொல்லி வழிநடத்தியவர் சிவாஜி. சிவாஜி ஹீரோவாக நடித்த ‘நான் வாழவைப்பேன்’ படத்தின் இரண்டாம் பாதியில் ரஜினி வருவார். அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். படத்தின் கடைசி 20 நிமிடம் ரஜினியை சுற்றியே நிகழும். இப்படம் முடிந்தபோது ரஜினியின் காட்சிகளில் சிலவற்றை வெட்டிவிடலாமா? என இயக்குனர் கேட்க ‘ஏன் வெட்டணும். ரஜினி நல்லா பண்ணி இருக்கான். அவனும் வளரும் ஒரு நடிகன்தான்.. அப்படியே இருக்கட்டும்’ என சொன்னவர் சிவாஜி.
ரஜினியுடன் விடுதலை, படிக்காதவன், படையப்பா ஆகிய படங்களில் நடித்தார். ஒருமுறை ‘நான் திடீரென இறந்துவிட்டால் என் இறுதி ஊர்வலத்துக்கு நீ வருவியாடா?’ என ரஜினியிடம் கேட்டார் சிவாஜி. அவர் கேட்டதுபோலவே சிவாஜியின் இறுதி ஊர்வலம் முடியும் வரை அங்கே இருந்தார் ரஜினி.
இதையும் படிங்க: சிவாஜிகிட்டயே தனது வேலையை காட்டிய சந்திரபாபு… குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல…
ஒருமுறை வெளியூர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ரஜினி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு சிவாஜியும் வந்துவிட்டார். இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். ரஜினியை பார்த்த ரசிகர்கள் ‘சூப்பர்ஸ்டார்.. சூப்பர்ஸ்டார்’ என கத்த ரஜினிக்கோ சங்கடமாக போய்விட்டது. இவ்வளவு பெரிய நடிகர் சிவாஜி இங்கே இருக்கும்போது நம்மை புகழ்ந்தால் மரியாதையாக இருக்காது என நினைத்த ரஜினி ஒரு இடத்தில் ஒளிய பார்த்துள்ளார்.
இதை கவனித்த சிவாஜி ‘டேய் இங்க வா. ஏன் ஒளியற?.. இது உன்னோட காலம். உன்ன மக்களுக்கு பிடிச்சிருக்கு. அதை ஏத்துக்கோ.. என்ஜாய் பண்ணு.. இங்க எதுவும் நிரந்தரம் இல்ல. இருக்கும்போதே அனுபவச்சிக்கோ’ என சொன்னாராம்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டத்தை கொடுத்தது யார் தெரியுமா? எந்த நடிகருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலையே!..
[ad_2]